ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி - தொடர்ந்து 2-வது முறையாக குத்தரேஸ் தேர்வு

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக ஆண்டனியோ குத்தரேஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்
ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி - தொடர்ந்து 2-வது முறையாக குத்தரேஸ் தேர்வு
x
ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி - தொடர்ந்து 2-வது முறையாக குத்தரேஸ் தேர்வு 

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக ஆண்டனியோ குத்தரேஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக குத்தரேஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், அவரை மீண்டும் பொதுச்செயலாளராக ஐ.நா. உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுத்து உள்ளன. தொடர்ந்து 2-வது முறையாக ஐ.நா. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள குத்தரேஸ், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியை தொடர்வார். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு பேசிய குத்தரேஸ், நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை வளர்ப்பதற்கு செயலாற்றுவேன் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்