கொரோனா தடுப்பூசிக்கு பசு மாடு பரிசு - தாய்லாந்தில் நூதன அறிவிப்பு

தாய் லாந்தின் சியாங் மை மாகாணத்தில் உள்ள மே சேம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு, வாரம் ஒருமுறை குலுக்கல் முறையில் பசு மாடு ஒன்று பரிசாக வழங்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசிக்கு பசு மாடு பரிசு - தாய்லாந்தில் நூதன அறிவிப்பு
x
தாய் லாந்தின் சியாங் மை மாகாணத்தில் உள்ள மே சேம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு, வாரம் ஒருமுறை குலுக்கல் முறையில் பசு மாடு ஒன்று பரிசாக வழங்கப்படுகிறது. கடந்த வாரம் 65 வயது முதியவரான இன்காம் தொன்காமுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்தது. இது குறித்து பேசிய அவர், இந்தப் பரிசு தனக்கு விலை உயரந்தது எனவும், தனது வாழ்வாதாரத்திற்கு உதவும் விதமாக பசு மாடு பரிசளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், அரசின் இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்களில் 50 சதவீதம் பேர் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்