13.06.2021 | குங்ஃபூ போட்டியில் 98 வயது பாட்டியின் சாகசம் | விறுவிறு செய்திகள் | உலக செய்திகள்

சீனாவி​ன் ஜெஜியாங் மாகாணத்தில் நடைபெற்ற குங்ஃபூ போட்டியில் 98 வயது பாட்டியின் சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.
13.06.2021 | குங்ஃபூ போட்டியில் 98 வயது பாட்டியின் சாகசம் | விறுவிறு செய்திகள் | உலக செய்திகள்
x
13.06.2021 | குங்ஃபூ போட்டியில் 98 வயது பாட்டியின் சாகசம் | விறுவிறு செய்திகள் | உலக செய்திகள் 

சீனாவி​ன் ஜெஜியாங் மாகாணத்தில் நடைபெற்ற குங்ஃபூ போட்டியில் 98 வயது பாட்டியின் சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது. ஷாங் ஹெக்சியன் என்ற அந்த பாட்டி, போட்டியில் கலந்து கொண்டு, அனைவருக்கும் குங்ஃபூ கலை நுணுக்கங்களை கற்று கொடுத்தார். அவரிடம், சிறியவர்கள் ​முதல் பெரியவர் வரை அனைவரும் ஆர்வத்துடன் கற்று கொண்டனர். 

உலகின் பார்வையை பெற்றுள்ள சீனாவின் யானை கூட்டம், கடந்த 5 நாட்களாக தென்மேற்கு யூனான் மாகாணம், இமெனில் உள்ள ஒரு நகர்ப்பகுதியில் நடமாடி வருகின்றன. கடந்த ஒரு மாதமாக 15 ஆசிய யானைகளின் கூட்டம் இடம் பெயர்ந்து வருகின்றன. யுனான் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் வழியாக நகர்ந்து வரும் இந்த யானைக்கூட்டம், கடந்த 5 நாட்களாக ஒரே நகர்ப்பகுதியில் நடமாடி வருகின்றன. இமென் பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு அதிகளவில் இருப்பதாலே
யானைகள் நீண்ட நாட்கள் இங்கு நீடிப்பதாக கூறப்படுகிறது. 


வருகிற ஜூலை 20-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் உடன் பயணிப்பதற்கான இருக்கையை,  205 கோடி ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது ஜெப் பெசாஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் பயணிப்பதற்கான ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில், 28 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 205 கோடி மதிப்பிலான முன் பதிவு ஒருவர் செய்துள்ளதாக, புளு ஆரிஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 143 நாடுகளில் இருந்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஏலத்தில், தேர்வானவர் பெயரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. 

இங்கிலாந்தில்,ஜி-7 மாநாடு நடைபெற்று வரும் நிலையில்,  பிரதமர் போரிஸ் ஜான்சன் கடற்கரையில் நடைபயிற்சி சென்றதோடு, நீச்சல் பயிற்சி மேற்கொண்டார். கார்பிஸ் விரிகுடாவில், ஜி 7 உச்சிமாநாடு நடைபெற்றது. இறுதி நாளன்று, அந்த மாநாட்டில் பங்கேற்கும், இங்கிலாந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது மனைவியோடு, அங்குள்ள கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டதோடு, கடலிலும் குளித்து மகிழ்ந்தார்.

சிரியாவின் அப்ரின் நகரில் உள்ள மருத்துவமனை மீது, குர்தீஸ் படைகள் தான் ஏவுகணைகளை வீசியதாக அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள துருக்கி ஆதரவு படையினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். சிரியாவின் அப்ரின் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை மீது 2 ஏவுகணைகள் விழுந்தன. இதில் ஊழியர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். குர்தீஸ் படையினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என அரசு தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், செக் குடியரசு வீராங்கணை பார்போரா கிரேஜிகோவா, 24 மணி நேரத்துக்குள் 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை வீழ்த்தி 40 ஆண்டுகளுக்கு பின் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற வீராங்கணை என்ற பெருமை பெற்றார். இந்த நிலையில் இன்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவில் கட்ரினா சினியாகோவாவுடன் இணைந்து, உலகின் முதல் இடத்தில் உள்ள இகா ஸ்வியாடெக் , பெத்தானியா மட்டேக் ஜோடியை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 2000 ஆம் ஆண்டுக்கு பின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் பெண் என்ற பெருமையும் தனதாக்கி கொண்டார்.  

Next Story

மேலும் செய்திகள்