ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு - வாள் கொண்டு கேக் வெட்டி மகிழ்ந்த ராணி

ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு இங்கிலாந்தில் உள்ள காா்ன்வால் மாகாணத்தில் நேற்று தொடங்கிய நிலையில், இந்நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார்.
ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு - வாள் கொண்டு கேக் வெட்டி மகிழ்ந்த ராணி
x
ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு இங்கிலாந்தில் உள்ள காா்ன்வால் மாகாணத்தில் நேற்று தொடங்கிய நிலையில், இந்நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். உடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இளவரசர் ஃபிலிப்பின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும். அப்போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுக்கையில், ராணி 2ம் எலிசபெத் நகைச்சுவையாகப் பேசி, அனைத்துத் தலைவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார். மாநாட்டிற்கிடையில், 2ம் எலிசபெத் கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் சிறப்பம்சமாக ராணி வாள் கொண்டு கேக் வெட்டியது அனைவரயும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. 


Next Story

மேலும் செய்திகள்