விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா - விண்வெளிக்கு செல்லும் 3 வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா உருவாக்கி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்த திட்டம் பற்றி ஒரு தொகுப்பு.
விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா - விண்வெளிக்கு செல்லும் 3 வீரர்கள்
x
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா உருவாக்கி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்த திட்டம் பற்றி ஒரு தொகுப்பு.

பூமியின் இருந்து 340 முதல் 450 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்தை சீனா உருவாக்கி வருகிறது. 

இதன் முதல் தொகுதியான தியான்ஹெ பெட்டகம் ஏப்ரல் 29ல் தானியங்கி முறையில் ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

BREATH.. சீன விண்வெளி நிலையம், லாங் மார்ச் ராக்கெட், விண்வெளி வீரர்கள், விண்வெளி நடை

ஜூன் 17ஆம் தேதி, லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் ஷென்சூ 12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை தியான்ஹெ பெட்டகத்திற்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

மூன்று மாதங்கள் அந்த பெட்டகத்தில் தங்கி, விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் இந்த மூன்று வீரர்களும் ஈடுபட உள்ளனர்.

ஸ்பேஸ் சூட் எனப்படும் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, பெட்டகத்தை விட்டு வெளியேறி, பல மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 

இந்த அபாயகரமான பணிகளை மேற்கொள்ள தேவையான பல்வேறு பயிற்சிகள் அந்த வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

வெற்றிட பயிற்சி மற்றும் நீருக்கடியில் பயிற்சிகள் போன்ற கடுமையான பயிற்சிகளை தொடர்சியாக ஏழு மணி நேரத்திற்கு அளிக்கப்பட்டு, அவர்களின் உடல் உறுதி மற்றும் மனதிடம் மேம்படுத்தப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்