90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 50 கோடி பைசர் - அமெரிக்கா வழங்க உள்ளதாக பைடன் தகவல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 90-க்கும் மேற்பட்ட குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு சுமார் 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 50 கோடி பைசர் - அமெரிக்கா வழங்க உள்ளதாக பைடன் தகவல்
x
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 50 கோடி பைசர் - அமெரிக்கா வழங்க உள்ளதாக பைடன் தகவல் 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 90-க்கும் மேற்பட்ட குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு சுமார் 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 64 சதவீதம் மக்களுக்கு பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர். தற்போது உலக நாடுகளுக்கு நன்கொடை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இது பற்றி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், இன்றைய நன்கொடையின் குறிக்கோள் உயிர்களை காப்பாற்றுவதும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது எனத் தெரிவித்துள்ளது. மேலும் பெருந்தொற்றுக்கு எதிரான உலகின் போராட்டத்திற்கு இது உதவும் என்றும்,  சுமார் 8 கோடி டோஸ்கள் ஜூன் இறுதிக்குள் நன்கொடை அளிப்பதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்திற்காக 200 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்