அதிரவைத்த அமெரிக்க ஆப்ரேஷன்...!உலகம் முழுவதும் அதிரடி கைது நடவடிக்கை - சர்வதேச கும்பல் சிக்கியது எப்படி...?

அமெரிக்காவின் அதிரடி ஸ்டிங் ஆப்ரேஷனில் உலகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கும்பலை சேர்ந்த 800 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது..
அதிரவைத்த அமெரிக்க ஆப்ரேஷன்...!உலகம் முழுவதும் அதிரடி கைது நடவடிக்கை - சர்வதேச கும்பல் சிக்கியது எப்படி...?
x
அமெரிக்காவின் அதிரடி ஸ்டிங் ஆப்ரேஷனில் உலகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கும்பலை சேர்ந்த 800 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.. இவ்விவகாரத்தில் உலக நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கு ஒரு செல்போன் செயலி எவ்வாறு உதவியது என்பதை தற்போது பார்க்கலாம்....

ஆஸ்திரேலியாவின் பிரதான சாலைகள்... சைரன் விளக்கு பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் ஆங்காங்கே கார்களை இடைமறிக்கிறது 

திபுதிபுவென இறங்கும் போலீசார், காரில் இருக்கும் இளைஞர்களின் கைகளை பின்னால் மடக்கி மண்டியிடச் செய்து கைது செய்கிறார்கள்... 

சொகுசு விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் சில அறைகளுக்குள், ஆயுதங்களை இலக்கை குறிவைக்கும் வகையில் ஏந்தியவாறு அதிரடியாக நுழையும் போலீசார் அங்கும் சில இளைஞர்களை கைது செய்கிறார்கள்... 

அவர்களின் உடமைகளை சோதனையிடும் போது பண்டல், பண்டலாக போதைப் பொருட்கள் கிடைக்கிறது... இதனையெல்லாம் பறிமுதல் செய்யும் போலீசார், அடுத்தடுத்த சோதனையை மேற்கொள்ள ஓடுகிறார்கள்... 


Next Story

மேலும் செய்திகள்