"அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக வராதீர்கள்" - கெளதமாலா நாட்டினரிடம் கூறிய கமலா ஹாரிஸ்

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்காதீர்கள் என அண்டை நாட்டினருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக வராதீர்கள் - கெளதமாலா நாட்டினரிடம் கூறிய கமலா ஹாரிஸ்
x
அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்காதீர்கள் என அண்டை நாட்டினருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அகதிகள் விவகாரத்தில் பைடன் அரசும் கடுமை காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

டிரம்ப் ஆட்சியின் போது, அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில், சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்க ஒரு பெரும் சுவரை கட்ட திட்டமிட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மெக்சிகோ மூலம், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சி செய்த, பல ஆயிரம் லத்தீன் அமெரிக்க நாட்டினரை அகதிகள் முகாம்களில் வைத்தது, டிரம்ப் அரசு...

பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து தனியாக அடைத்து வைத்ததற்கு, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கடுமையாக கண்டனம் செய்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்