அரிய வகை லெமூர் குரங்குகள் - செஸ்டர் பூங்காவிற்கு வருகை

அரிய வகை லெமூர் இனத்தைச் சேர்ந்த 2 குரங்குகள், முதன்முதலாக இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
அரிய வகை லெமூர் குரங்குகள் - செஸ்டர் பூங்காவிற்கு வருகை
x
அரிய வகை லெமூர் இனத்தைச் சேர்ந்த 2 குரங்குகள், முதன்முதலாக இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளன. 8 வயதான இந்த குரங்குகளுக்கு பியாட்ரிஸ் மற்றும் எலியட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மடகாஸ்கர் பகுதிகளில் வாழக்கூடிய அரிய இனங்களில் ஒன்றான இந்த குரங்குகளைக் காக்கும் பொருட்டு, இந்தப் பூங்காவில் அவை பராமரிக்கப்படுகின்றன. மரங்களிலும் புல்வெளிகளிலும் அழகாகத் தாவித்தாவி செல்வதும், நடனமாடுவதும், இவற்றின் அப்பாவித் தனமான தோற்றமும் பார்ப்போரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்