"சீன ராணுவம் தான் வைரஸை உருவாக்கியது"- அமெரிக்க முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்

கொரோனாவை சீனா தான் உருவாக்கியது என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்க முன்னாள்அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
சீன ராணுவம் தான் வைரஸை உருவாக்கியது- அமெரிக்க முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்
x
முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது சீனாவில் தான் என்றாலும், இன்று உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 98வது இடத்தில் உள்ளது, சீனா....கடந்த ஆண்டே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட சீனாவில், தற்போது வரை வெறும் 91 ஆயிரம் பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. 
பொருளாதார பின்னடைவு, தவியாய் தவிக்கும் மக்கள் என கொரோனாவால் படாதபாடு பட்டு வரும் நாடுகள், சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு இதுவே காரணமாகவும் பார்க்கப்படுகிறது.அதிலும், கடந்த ஆண்டு கொரோனாவை சீன வைரஸ் என குறிப்பிட்டு, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தவர், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்....கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல...  உலக நாடுகளிடையே ஆதிக்கம் செலுத்த  சீனா தான் வேண்டுமென்றே உருவாக்கி பரப்பியதாக இன்றளவும் பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. சீனாவிற்கு எதிரான குரல்கள் வலுக்கவே, உண்மை நிலவரத்தை கண்டறிய பலநாட்டு வல்லுநர்கள் அடங்கிய குழுவை சீனா அனுப்பியது, உலக சுகாதார அமைப்பு... உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் முடிவில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 
இதனால், கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது தற்போது வரை விடை காணாத கேள்வியாகவே நீடிக்கிறது... இந்த நிலையில், கொரோனா வைரஸை சீன ராணுவம் தான் உருவாக்கி பரப்பியதாகவும், வூஹான் ஆய்வகங்களில் ராணுவத்திற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார், டிரம்ப் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய மைக் போம்பியோ மேலும், இரண்டு ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட வைரஸ் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக 2 ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பிரிட்டன் மற்றும் நார்வேவைச் சேர்ந்த வைரஸ் ஆய்வு நிபுணர்கள் 2 பேர் இது தொடர்பாக ஆய்வறிக்கையை தயாரிததுள்ளனர்.விரைவில் இந்த ஆய்வறிக்கை பொது தளத்தில் வெளியாகும் என்றும் தெரியவந்திருப்பது.... புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 



Next Story

மேலும் செய்திகள்