புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவுக்கு ஆளானால் இதய, புற்று நோய் ஏற்பட 50 % வாய்ப்பு

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்றை தொடர்ந்து புற்றுநோய், இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவுக்கு ஆளானால் இதய, புற்று நோய் ஏற்பட 50 % வாய்ப்பு
x
புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவுக்கு ஆளானால் இதய, புற்று நோய் ஏற்பட 50 % வாய்ப்பு 

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்றை தொடர்ந்து புற்றுநோய், இதய நோய் ஏற்பட  அதிக வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.புகையிலை தடுப்பு திட்டத்தை  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள், புற்று நோய், இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்களுக்கு ஆளாகலாம் எனவும் புகை பிடிப்பவர்களுக்கு இந்த நோய்கள் தாக்க 50 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளதாகவும், மரணம் கூட ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.புகை பிடிப்பதில் இருந்து மக்களை காக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா தொற்று, நேரடியாக நுரையீரல் உடன் தொடர்புடையது என்பதால் புகைப்பழக்கம் கொண்டவர்களிடம் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த 2019-ல் சிகரெட் வகைகளுக்கு இந்தியா தடை விதித்த செயலுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்