சிவப்பு நிறத்தில் மின்னப்போகும் நிலவு - வானில் இன்று அதிசய நிகழ்வு

வானில் இன்று அதிசய நிகழ்வான சூப்பர் பிளட் மூன் உடன் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது.
சிவப்பு நிறத்தில் மின்னப்போகும் நிலவு - வானில் இன்று அதிசய நிகழ்வு
x
சிவப்பு நிறத்தில் மின்னப்போகும் நிலவு - வானில் இன்று அதிசய நிகழ்வு 

வானில் இன்று அதிசய நிகழ்வான சூப்பர் பிளட் மூன் உடன் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது.இந்திய நேரப்படி மதியம் 2.17 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குவதால், இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து, நிலவை சென்றடைவதால், நிலவு இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னும். இதனால், "இரத்த நிலவு" என்று அழைக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்தை ஒத்த பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளிச்சம் சிதறடிக்கப்படுவதால் தூசுகளும் மேகங்களும் ஒன்றாக சூழ்ந்து, சந்திரன் அதிக அளவில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் தான் சூப்பர் ப்ளட் மூன் என்றும் அழைப்படுகிறது. அத்துடன், சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், இந்த நிகழ்வு "சூப்பர் மூன்" என்றும் அழைக்கப்படுகிறது. வானியலாளர்களின் கூற்றுப்படி, சந்திரன் இயல்பை விட 7 சதவீதம் பெரியதாகவும், 15 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தின் முழு நிலவு வசந்த காலத்தில் ஏற்படுவதால் "ஃப்ளவர் மூன்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றாக நிகழும்போது, இந்த நிகழ்வை "சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்" என்று அழைக்கப்படுகிறது.

 

Next Story

மேலும் செய்திகள்