நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்போம்; முள்ளிவாய்க்கால் பொது கட்டமைப்பு உறுதி

இலங்கையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடை செய்து, குழப்பம் செய்வதாக அந்நாட்டு அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்போம்; முள்ளிவாய்க்கால் பொது கட்டமைப்பு உறுதி
x
இலங்கையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடை செய்து, குழப்பம் செய்வதாக அந்நாட்டு அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர், நினைவேந்தலில் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.  நினைவேந்தலை அமைதியாக  முன்னெடுக்கவே விரும்புவதாகவும், ஆனால் அரசு தான் தடைகளை விதித்து குழப்பம் செய்வதாகவும் கூறினர். இரவு ஊரடங்கு விதித்து, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை களவாடி சென்றுவிட்டதாக குற்றம்சாட்டும் அவர்கள், புதிய கல் நடவந்தவர்களை, போலீஸ் மற்றும் ராணுவத்தினர் தடை செய்ததாகவும் குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்