"ஸ்கைடைவிங்" செய்த சாகச வீரர்... ஓடும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சாகசம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில், "ஸ்கைடைவிங்" செய்யும் சாகச வீரர் ஒருவர், விமானத்திலிருந்து குதித்து அதிரடியாக ஓடும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்த விதம் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஸ்கைடைவிங் செய்த சாகச வீரர்... ஓடும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சாகசம்
x
"ஸ்கைடைவிங்" செய்த சாகச வீரர்... ஓடும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சாகசம்
 
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில், "ஸ்கைடைவிங்" செய்யும் சாகச வீரர் ஒருவர், விமானத்திலிருந்து குதித்து அதிரடியாக ஓடும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்த விதம் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விமானத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர், ஸ்கைடைவிங் செய்து, வேகமாகத் தரையிறங்கிக் கொண்டிருக்கும்போதே, இயக்கத்தில் இருந்த இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் "ஜம்மென்று" அமர்ந்த விதம் அனைவரையும் வாயடைத்துப் போகச் செய்தது.  

ஸ்விட்சர்லாந்து நாட்டில் சூரிச் நகரப் பகுதியில் உள்ள தேவாலயத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்த வரும் மக்களை இசைக்கலைஞர் ஒருவர் பியானோ வாசித்து மகிழ்வித்து வருகிறார். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இங்கு மற்ற தடுப்பூசி செலுத்தும் மையங்களைப் போல் அல்லாமல், மனதிற்கு அமைதி தரும் வகையில் இதமான சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாகக் கூறி மகிழ்ந்தனர். மக்களின் அச்சம் போக்க இசையோடு மருத்துவப் பணிகள் நடைபெற்று வருவதை அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். 

உலகம் முழுவதும் கொரோன பரவலானது அதிகரித்து வரும் நிலையில், பெருந்தொற்றிலிருந்து விடுபடும் பொருட்டு, போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள பாத்திமா தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை செய்தனர். ஆலய வளாகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சுமார் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, கொரோனா தொற்றிலிருந்து விடுபடும் பொருட்டு பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற 71 வயது மூதாட்டி எமிலியா இது குறித்து தெரிவிக்கையில், வருடந்தோறும் தவறாமல் இந்த தேவாலயத்திற்கு வந்தாலும், கொரோனா காலத்தில் மக்களுக்காக பிரார்த்தனை செய்ய இம்முறை வந்திருப்பது மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்