இஸ்ரேல் - பாலஸ்தீனம் பயங்கர மோதல்... இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் ஆவேசம்

தங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதாகவும், மக்களை காப்பது தங்கள் கடமை என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பயங்கர மோதல்... இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் ஆவேசம்
x
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பயங்கர மோதல்... இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் ஆவேசம்  

தங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதாகவும், மக்களை காப்பது தங்கள் கடமை என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.மத்திய கிழக்குப்பகுதியில் இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே மீண்டும் பயங்கர மோதல் வெடித்து உள்ளது. கிழக்கு ஜெருசலேமை மையமாகக் கொண்டு நடக்கும் இந்த மோதலில், இரு தரப்பினரும் வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வான்வெளித் தாக்குதலில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லியர் ஹயட் கூறி உள்ளார். ஹமாஸ் அமைப்பினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாகவும், தற்காத்துக்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளதென்றும் அவர் கூறி உள்ளார். காசா பகுதியில் ராக்கெட்டுகள் ஏவப்படுவது போர்க்குற்றம் என்றும், சர்வதேச அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்