இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் பலியான சோகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் பலியான சோகம்
x
இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் பலியான சோகம் 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவை சேர்ந்த 31 வயதான சௌமியா என்ற பெண் இஸ்ரேலின் அஷ்கிலான் நகரில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் இருந்து செயல்படும் ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு ராக்கெட்களை இஸ்ரேல் பாதுகாப்பு ஏவுகனைகள் தடுத்து அழித்தன. சில ராக்கெட்டுகள் இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்த‌தாக தெரிகிறது. இதில் சௌமியா உள்ளிட்ட 3 பெண்கள் உயிரிழந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். சௌமியாவுக்கு சந்தோஷ் என்ற கணவரும், 9 வயது மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்