இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மோதல்... வான்வெளி தாக்குதல் - 20பேர் உயிரிழப்பு

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மோதல்... வான்வெளி தாக்குதல் - 20பேர் உயிரிழப்பு
x
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மோதல்... வான்வெளி தாக்குதல் - 20பேர் உயிரிழப்பு

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா முனையில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.மொத்தம் 45 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிலடி கொடுத்துள்ளது.காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் ஜெருசலேம், ஹமாஸ் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்