இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை - ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன்

நாட்டின் நலன் கருதியே இந்தியாவில் இருந்து வரும் ஆஸ்திரேலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை - ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன்
x
நாட்டின் நலன் கருதியே இந்தியாவில் இருந்து வரும் ஆஸ்திரேலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்தியாவுடனான விமான சேவையை பல நாடுகள்  துண்டித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டவர்கள் திரும்ப ஆஸ்திரேலியா அதிரடி தடையை வித்தது. மேலும் தடையை மீறி ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் 5 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரையில் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. ஆஸ்திரேலிய அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், நாட்டின் நலன் கருதி ஆஸ்திரேலியாவில் கொரோனா 3-வது அலை உருவாவதை இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து திரும்புபவர்களால் 7 மடங்கு அதிகமாக தொற்று ஏற்படுவதை காண முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

Next Story

மேலும் செய்திகள்