"மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரவுமா?" - இங்கிலாந்தில் கூட்டம் கூடி சோதனை முயற்சி

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் மாகாணத்தில், விழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் கொரோனா பரவுமா என்பதை சோதிக்க, கொரோனா தொற்று இல்லாதவர்களை ஒன்றிணைத்து, சோதனை முயற்சியாக மாபெரும் ஒரு நாள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரவுமா? - இங்கிலாந்தில் கூட்டம் கூடி சோதனை முயற்சி
x
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் மாகாணத்தில், விழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் கொரோனா பரவுமா என்பதை சோதிக்க, கொரோனா தொற்று இல்லாதவர்களை ஒன்றிணைத்து, சோதனை முயற்சியாக மாபெரும் ஒரு நாள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நாளுக்கு நாள் அதிவேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா தொற்று இல்லாதவர்கள் ஒன்று கூடினால் கொரோனா பரவல் ஏற்படுமா என்று சோதிக்க இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்