போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சி.. சீன அரசு ரூ. 20,924 கோடி அபராதம் விதிப்பு

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக அலிபாபா நிறுவனத்துக்கு சீன அரசு 20 ஆயிரத்து 924 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சி.. சீன அரசு ரூ. 20,924 கோடி அபராதம் விதிப்பு
x
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சி.. சீன அரசு ரூ. 20,924 கோடி அபராதம் விதிப்பு 

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக அலிபாபா நிறுவனத்துக்கு சீன அரசு 20 ஆயிரத்து 924 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் அலிபாபா, வியாபாரி ஒருவர் தன்னுடைய பொருட்களை பிற தளங்களில் விற்பனை செய்வதை தடுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து  சீன அரசின் சந்தைகளுக்கான ஒழுங்குமுறை ஆணையம் டிசம்பரில் விசாரணையை தொடங்கியது. விசாரணையில், அலிபாபா நிறுவனம் போட்டி நிறுவனங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்நிறுவனத்திற்கு 20 ஆயிரத்து 924 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை அலிபாபா நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டின் மொத்த விற்பனையில் 4 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்