இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி : 19 பேர் கைது - போலீஸ் அதிரடி

ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 420 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி : 19 பேர் கைது - போலீஸ் அதிரடி
x
ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 420 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து அதிரடியாக களமிறங்கிய போலீசார் பல்வேறு பகுதிகளி தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நேரு நகர் பகுதியை சேர்ந்த நவாஸ்கான் என்பவர் வீட்டில் 260 கிலோ கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒருவாரமாக பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்திய நிலையில் 420 கிலோ கஞ்சா, 29 புள்ளி 5 லட்ச ரூபாய் பணம், 3 படகு, 3 வாகனங்கள் மற்றும் 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.      


Next Story

மேலும் செய்திகள்