டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு
x
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. நெகுயன் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் இந்த படிமங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்து உள்ளனர். இந்த படிமங்கள், தாவரம் உண்ணும் டைட்டனோசர் வகையை சார்ந்தவை என்றும், இதுவரை கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் மிகப் பெரியதாக இது இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்

இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு - துள்ளிக் குதித்து பனியில் விளையாடும் நாய் -பனியில் கால் வைக்க பதறும் பூனை

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவரும் நிலையில், மெர்சேசைட் பகுதியில் நாய் ஒன்று பனியில் உற்சாகமாக துள்ளிக் குதித்து விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது. இதேபோல், பனியில், பதட்டத்துடன் கால் வைக்கும் பூனை ஒன்றின் காட்சியும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பூங்கா ஊழியரின் காலை இறுகப் பற்றிய பாண்டா - காலை விடமறுத்து விளையாட்டு - பகிரப்படும் பாண்டாவின் குறும்புத்தனம்

தென்கொரியாவின் யோங்கின் பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் வளர்க்கப்படும் பாண்டாக் கரடி, பூங்கா ஊழியரின் காலை இறுக்கமாகப் பற்றி விளையாடி உள்ளது. அவருடைய காலை விட மறுத்து, குறும்புத்தனம் செய்த பாண்டாவின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை, 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யூடியூபில் கண்டுகளித்து உள்ளனர்

பரிசோதனை செய்யப்பட்ட பறக்கும் டாக்ஸி - ரஷ்ய நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு - உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

ரஷ்யாவை சேர்ந்த ஹோவர் சர்ஃப் நிறுவனம் தாங்கள் வடிவமைத்த பறக்கும் டாக்ஸியை வெற்றிகரமாக பரிசோதனை செய்து உள்ளது. தரையில் இருந்து சற்று உயரமாக பறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது மேலும் பரிசோனை செய்யப்படும் என்றும், அதிக எண்ணிக்கையில் இவற்றை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்