மருத்துவமனையில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை - 6 கி.மீ தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் பனியில் சிக்கிய தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர்.
மருத்துவமனையில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை - 6 கி.மீ தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்
x
ஜம்மு காஷ்மீரில் பனியில் சிக்கிய தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர். குப்வாரா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த நிலையில் ஓய்வுக்கு பின் அவர் வீட்டிற்கு செல்ல இருந்தார். ஆனால் சாலை முழுவதும் பனிபடர்ந்திருந்ததால் வாகனங்களை இயக்கமுடியவில்லை. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் ராணுவத்தின் உதவியை கோரினர். இதை தொடர்ந்து அங்கு வந்த ராணுவவீரர்கள், தாய் மற்றும்  குழந்தையை தங்களது தோளில் வைத்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச்சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்