நவால்னி கைதுக்கு எதிர்ப்பு - ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் ரஷ்யாவின் முக்கிய பகுதிகள் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.
நவால்னி கைதுக்கு எதிர்ப்பு - ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்
x
ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் ரஷ்யாவின் முக்கிய பகுதிகள் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.ரஷ்ய எதிர்கட்சி தலைவரும், வழக்கறிஞருமான அலெக்ஸி நாவல்னி கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த வாரம் ஜெர்மனியில் இருந்து வந்த அலெக்ஸி நாவல்னியை ரஷ்ய போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்னியின் ஆதரவாளர்கள் தலைநகர் மாஸ்கோ உள்பட நாட்டின் முக்கிய பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறிய நிலையில் பல்வேறு பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கொடூரமாக தாக்கி கைது செய்வதாக ரஷ்ய போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.   


Next Story

மேலும் செய்திகள்