நீங்கள் வழங்கிய பணிக்காக போராடினேன் - விடைபெறுதல் உரையாற்றிய அமெரிக்க அதிபர்

அமெரிக்க மக்கள் தனக்கு வழங்கிய பணியை சிறப்பாக செய்ததாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
நீங்கள் வழங்கிய பணிக்காக போராடினேன் - விடைபெறுதல் உரையாற்றிய அமெரிக்க அதிபர்
x
அமெரிக்க மக்கள் தனக்கு வழங்கிய பணியை சிறப்பாக செய்ததாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து வெளியேறும் டிரம்ப் விடைபெறுதல் உரையாற்றி வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இதுவரையில் அமெரிக்க தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியுற்றதை முழுமனதாக ஏற்றுக்கொள்ளாத டிரம்ப், அமெரிக்க மக்கள் தன்னை எதற்காக தேர்வு செய்தார்களோ, அப்பணியை சிறப்பாக செய்ததாகவும், அவர்களுக்கு நன்றியை கூறிக்கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட பணிக்காக கடுமையாக உழைத்ததாக கூறியிருக்கும் டிரம்ப், உலக அளவில் அமெரிக்காவின் தலைமையை வலுப்பெற செய்ததாகவும், அமெரிக்க பொருளாதாரத்தை சிறப்பாக கட்டமைத்து உள்ளாதாகவும் கூறியுள்ளார். சீனாவுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் அமெரிக்க தலைமையில் உலக நாடுகளை அணிப்படுத்தி உள்ளோம் என்றும் கூறியுள்ளார். மேலும் வன்முறை அரசியலானது அமெரிக்கர்கள் மதிக்கும் எல்லாவற்றுக்கும் எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜோ பைடன் பெயரை குறிப்பிடாமல் வரவிருக்கும் நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்