பனிப்புயல் : ஸ்தம்பித்த ஸ்பெயின் - 50 ஆண்டில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு
பதிவு : ஜனவரி 11, 2021, 09:11 AM
பனிப்புயலால் ஸ்பெயின் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.
திரும்பிய இடமெல்லாம் வெண்போர்வை போர்த்தியது போன்ற காட்சி... ஆங்காங்கே சாலைகளில் நிற்கும் வாகனங்கள்... பொத்தென்று முறிந்து விழும் மரக்கிளைகள்... மழைபோல மணி மணியாய் கொட்டும் பனி... ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கடந்த நான்கு நாட்களாக நீடிக்கும் நிலை இதுதான்... 

ஸ்பெயினை புளோமினா என்னும் பனிப்புயல், பாரபட்சம் பாராமல், பதம் பார்த்து வருகிறது. இந்த பனிப்புயலின் தாக்கத்தால், ஒட்டுமொத்த ஸ்பெயினும் ஸ்தம்பித்துப்போய், செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

தலைநகர் மேட்ரிட்டில் வரலாறு காணாத அளவுக்கு பனி பொழிந்து வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளில் இப்படி ஒரு பனிப்புயலையே பார்த்ததில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர் அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள்... 

பனிப்புயலின் அச்சுறுத்தலால் மேட்ரிட், கியூயன்கா, டோலிடோ, அல்பசெட் உள்ளிட்ட நகரங்களுக்கு, அபாயகரமான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 

வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோன் நகரம், மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைந்துபோய் உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் 20 இன்ச் உயரத்துக்கு குவிந்து காணப்படுகிறது பனி... 

இங்குள்ள அனைத்து சாலைகளையும் பனி மூடிய நிலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே முடங்கி நிற்கின்றன. தொடர்ந்து பொழியும் பனியால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு விமானம் மற்றும் ரயில் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளன. 

பனியில் சிக்கிய வாகனங்களில் இருப்பவர்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், பனிப்புயலுக்கு இதுவரை அங்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 

இதனிடையே, மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு, ஸ்பெயின் அரச குடும்பமும், அந்நாட்டு அரசும் வலியுறுத்தி உள்ளன. 

ஆனால், ஸ்பெயின்வாசிகள், வீதிகளில் குவிந்து, உற்சாகமாக பனியில் விளையாடி, பொழுதைப் போக்கி வருகின்றனர். 

கடந்த மாதம் அமெரிக்காவை பனிப்புயல் அச்சுறுத்தியது. தற்போது அது ஸ்பெயினை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. சமீப காலமாக வெயில், மழை, பனி என எதுவாக இருந்தாலும், இயல்புக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. 

இவற்றுக்குப் பின்னால், பருவநிலை மாற்றம், மறைந்து நிற்கும் நிலையில்  ஸ்பெயின் பனிப்புயல்,... பருவநிலை மாற்றத்தை நினைவுபடுத்தும் ஓர் எச்சரிக்கை மணி தான்... 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

257 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

207 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

171 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

140 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

72 views

பிற செய்திகள்

டிரம்ப் வெளியே... பைடன் உள்ளே... அமெரிக்க பாரம்பரிய முறைப்படி பதவியேற்பு

ஒருபுறம் எதிர்பார்ப்பு மறுபுறம் சலசலப்பு அமெரிக்காவில் தொடர்ந்த சூழலில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார்.

7 views

ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனுக்கு இங்கிலாந்து பிரதமர், பிரான்ஸ் அதிபர், கனடா பிரதமர் ஜஸ்டின் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

18 views

"இந்த நிலையில் இருப்பதற்கு தாய் தான் காரணம்" - கமலா ஹாரிஸ் உருக்கம்

தான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு தனது தாய், சியாமளா கோபாலன் ஹாரிஸ் தான் காரணம் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

107 views

அமெரிக்க அதிபர் தேர்தல் - நடந்தது என்ன? : தேர்தலின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் நிலையில், தேர்தலில் நடந்த சம்பவங்களை பார்க்கலாம்...

33 views

அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி - விழாக்கோலம் பூண்டுள்ள அமெரிக்கா

அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டுள்ளது.

29 views

அமெரிக்காவின் புதிய துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ்...!

அமெரிக்காவின் புதிய துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்​கொண்டார்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.