ஊரடங்கால் முடங்கிய திரை பிரபலங்கள் மாலத்தீவில் மையம் - மாலத்தீவில் அப்படி என்ன தான் இருக்கிறது?

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் நடிகர், நடிகைகளை கொரோனா ஊரடங்கு முடக்கியது. ஊரடங்கு முடிந்ததும் பெரும்பாலான நட்சத்திரங்கள் படையெடுத்த நாடு, மாலத்தீவு.... மாலத்தீவில் அப்படி என்ன தான் இருக்கிறது? என்பதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
ஊரடங்கால் முடங்கிய திரை பிரபலங்கள் மாலத்தீவில் மையம் - மாலத்தீவில் அப்படி என்ன தான் இருக்கிறது?
x
தேனீ போல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரைப் பிரபலங்களையும், வீட்டைவிட்டு அடியெடுத்து வைக்க முடியாமல் முடக்கியது கொரோனா... ஊரடங்கால் பல திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கிய நிலையில், ஊரடங்கு காலத்தில் சமையல், உடற்பயிற்சி, தோட்டக்கலை உள்ளிட்டவையே அவர்களின் பொழுதுபோக்காக இருந்தன. 

ஒரு கட்டத்தில், எல்லாம் போதும் என ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது, தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகைகள் மாலத்தீவுக்கு படையெடுத்தனர். மாலத்தீவில் முதலாவதாக, முகாமிட்டவர் நடிகை காஜல் அகர்வால்... தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தனது கணவர் கவுதம் கிச்சலுவுடன், மாலத்தீவுக்கு தேனிலவு சென்று, சக நடிகைகளின் மாலத்தீவு படையெடுப்பை தொடங்கி வைத்தார். 

மாலத்தீவில் தன் கணவருடன் உற்சாகமாக நாட்களை காஜல் கழித்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. ஆழ்கடலில் கணவருடன் கைகோர்த்தவாறு, அவர் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் லட்சக்கணக்கில் லைக்குகளை வாங்கிக் குவித்தது. இவரைப் போல், ஆடுகள நாயகி, டாப்ஸி மாலத்தீவுக்கு சென்றதுடன், பிகினி உடையில் புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை கூட்டினார்.

இதற்கு அடுத்தபடியாக மாலத்தீவு சென்றவர் நடிகை பிரணிதா.. ஆழ்கடலில் மீன்களோடு மீன்களாக, ஸ்கூபா டைவிங் செய்து அசத்திய இவர், கரையோரம் ஊஞ்சல் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதேபோல், நடிகைகள் வேதிகா, ஹன்சிகா, சோனாக்ஸி சின்கா ஆகியோரும் மாலத்தீவுக்கு மறக்காமல் சென்று, மனதை மயக்கும் புகைப்படங்களை பதிவேற்றினர்.இவர்களைப்போல் முன்னணி நாயகியான சமந்தாவும் மாலத்தீவில் மையம் கொண்டார். தன் கணவர் நாக சைத்தன்யாவுடன் அவர் மாலத்தீவு சென்றிருந்தார். 

தமிழ் நடிகைகள் மட்டுமில்லாது, பாலிவுட் பிரபலங்களும் மாலத்தீவில் சமீப காலமாக பொழுதை போக்கி வருகிறார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான அழகழகான தீவுகளையும், கண்கவர் கடற்கரைகளையும், ரம்மியமான தட்பவெப்பநிலையையும் மாலத்தீவு கொண்டு உள்ளது. சுற்றுலாவையே நம்பியிருக்கும் மாலத்தீவு, கொரோனா பாதிப்புக்குப் பிறகு, சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் பல நடிகர் நடிகைகளை மாலத்தீவுக்கு வருமாறு மறைமுகமாக அழைப்பு விடுப்பதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்