தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு கொரோனா - அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவ பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு கொரோனா - அமெரிக்காவில் பரபரப்பு
x
அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவ பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் பணியாற்றும் மேத்யூ 18 ஆம் தேதி பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்டதாகவும், பக்க விளைவுகளும் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்து இருந்தார். பின்னர் 6 நாட்கள் கழித்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் அமெரிக்கர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தடுப்பூசி 79.3 சதவீதம் செயலாற்றுகிறது - சினோபார்ம் நிறுவனம் அறிவிப்பு 

சீனாவில் அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனத்தின் உகான் நகர பிரிவு தயாரித்த தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 79 புள்ளி 3 சதவீதம் செயல்திறன் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
சீனாவில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருந்தாலும், அங்கு இதுவரையில் எந்த ஒரு தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்