பசன் சார் தீவில் குடியமர்த்தப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள்

வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை தனித்தீவில் குடியமர்த்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
பசன் சார் தீவில் குடியமர்த்தப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள்
x
வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை, தனித்தீவில் குடியமர்த்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ரோஹிங்யா அகதிகளின் இரண்டாவது குழுவை கடற்படை அதிகாரிகள், வங்கக் கடலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பசன் சார் தீவில் கொண்டு சேர்த்தனர். சூறைக்காற்று அதிகம் வீசக்கூடிய இந்தத் தீவில் அகதிகளைக் குடியமர்த்துவதற்கு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அகதிகளை வற்புறுத்தி தீவில் குடியமர்த்தக் கூடாது என வங்கதேச அரசுக்கு ஐ.நா.வும் உத்தரவிட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்