புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - இங்கிலாந்து எல்லையை மூடிய பிரான்ஸ் அரசு

புதிய கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் மூடப்பட்டிருந்த இங்கிலாந்து எல்லை இன்று முதல் சரக்கு லாரிகளுக்காக திறக்கப்படுகிறது.
புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - இங்கிலாந்து எல்லையை மூடிய பிரான்ஸ் அரசு
x
இங்கிலாந்தில் மரபணு மாற்றம் கண்ட, புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இங்கிலாந்து உடனான எல்லையை பிரான்ஸ் அரசு மூடியிருந்தது. இதனால், டோவர் பகுதியில் 2 ஆயிரத்து 850 லாரிகள் நின்றன. இந்நிலையில், இருநாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, இன்று முதல் மூடப்பட்ட எல்லை திறக்கப்படுகிறது. இதன்மூலம், 72 மணிநேரத்திற்குள், பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானால், லாரி ஓட்டுநர்கள், பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் அவசர காரணங்களுக்காக பயணிப்பவர்கள் மட்டும், அனுமதிக்கப்படுவார்கள். புதிய கொரோனா வைரஸை கண்டறியக் கூடியதாக நம்பப்படும், ராபிட் லேட்டரல் ஃப்ளோ சோதனை மூலம், முப்பதே நிமிடங்களில் சோதனை முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இருந்து வரும் படகு, விமானம் மற்றும் ரயில் சேவைகளும், பிரான்சில் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்