"அமெரிக்காவில் 30 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி கிடைக்கவில்லை" - துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் தகவல் //

வளர்ந்த நாடான அமெரிக்காவில் 30 லட்சம் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டத்தை கொண்டு செல்ல முடியவில்லை என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 30 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி கிடைக்கவில்லை - துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் தகவல் //
x
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டு பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடம் நடத்தப் பட்டு வருகின்றன.  தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் 30 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி கிடைக்கவில்லை என்றும் , அவர்களுக்கு இணையதள வசதியை கிடைக்காதது பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்திருக்கிறார். தங்களது ஆட்சி பதவி ஏற்றதும் அந்த மாணவர்களுக்கு இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 80 லட்சம் மாணவர்கள் படிக்கின்ற போதிலும், அவர்களுக்கு முழுமையான அளவில் இணையதள வசதி இதுவரை ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்