வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு துணை செயலர் வேதாந்த் படேல் - ஜோ பைடன் நியமனம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு துணை செயலராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வேதாந்த் படேல் என்பவரை நியமித்து, அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு துணை செயலர் வேதாந்த் படேல் - ஜோ பைடன் நியமனம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்
x
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு துணை செயலராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வேதாந்த் படேல் என்பவரை நியமித்து, அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் அறிவித்துள்ளார். வேதாந்த் படேல் இப்போது ஜோ பைடனின் தொடக்க குழு செய்தித்தொடர்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் படி, ஜோ பைடனின் பிரசாரக் குழுவின் பிராந்திய தொலைத்தொடர்பு இயக்குநராகவும் வேதாந்த் படேல் பொறுப்பு வகித்துள்ளார். இது தவிர, ஜோ பைடன் ஆரம்ப கட்ட பிரசாரக் காலத்தில் நெவாடா மற்றும் மேற்கு மாகாணங்களின் தொலைத்தொடர்பு இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆண்டு கணக்குகளை சமர்ப்பிக்காத வெளிநாட்டு நிறுவனங்கள்/அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து நீக்க வழி செய்யும் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்க அரசின் தணிக்கையாளர்களிடம் தங்களுடைய ஆண்டு கணக்குகளை சமர்பிக்காத வெளிநாட்டு நிறுவனங்களை, அமெரிக்க பங்கு சந்தைகளில் இருந்து நீக்க வழி செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவினால் சீனாவின் அலிபாபா குழுமம், பைடு நிறுவனம் போன்ற பெரும் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதன் மூலம் சீன அமெரிக்க இடையேயான மோதல் போக்கு மேலும் தீவிரமடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இந்த மசோதா பெருவாரியான வாக்குகளை பெற்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்