புதிய பாப் வடிவத்தை அறிமுகம் செய்யும் முயற்சி - தீவிர பயிற்சியில் லைரா இசைக்குழு

தாய்லாந்தைச் சேர்ந்த பெண்கள் இசைக்குழு, டி-பாப் என்ற புதிய பாப் வடிவத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
புதிய பாப் வடிவத்தை அறிமுகம் செய்யும் முயற்சி - தீவிர பயிற்சியில் லைரா இசைக்குழு
x
தாய்லாந்தைச் சேர்ந்த பெண்கள் இசைக்குழு, டி-பாப் என்ற புதிய பாப் வடிவத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த கலைஞர்கள், கே-பாப் என்ற வடிவத்தை அறிமுகம் செய்தது, உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், தாய்லாந்தின் லைரா எனும் இசைக்குழு, சர்வதேச நிறுவனமான யுனிவர்செல் மியூசிக் குரூப் உடன் இணைந்து, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் பாப் இசை ரசிகர்களை, துள்ளல் இசை ஈர்க்கும் எனவும் லைரா இசைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்