மெக்சிகோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மெக்சிகோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மெக்சிகோவில் 2 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெக்சிகோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
x
மெக்சிகோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மெக்சிகோவில் 2 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முக்கிய சுற்றுலா தளமான கேன்கனில் நடந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

பெருவில் தொடரும் போராட்டம் - புதிய அதிபருக்கு மக்கள் எதிர்ப்பு

தென் அமெரிக்கா நாடான பெருவின் புதிய அதிபராக மேனுவேல் மெரினோ பொறுப்பேற்றுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி புதிய அதிபராக மெரினோ பதவியேற்று உள்ளதாக, அவர்கள் குற்றம்சாட்டினர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.

இத்தாலியில் கொரோனா 2-ஆவது அலை - ஒரே நாளில் 580 பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா 2-ஆவது அலை வீசி வரும் நிலையில், அங்கு கொரோனா தொற்றால் ஒரே நாளில் 580 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 98 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம், இத்தாலியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பா கோல்ப் தொடர்- சவுதி அரேபிய பெண் தகுதி 

ஐரோப்பா கோல்ப் தொடருக்கு முதல் முறையாக அரபு நாட்டை சேர்ந்த பெண் தகுதி பெற்று உள்ளார். ஏறத்தாழ 6 புள்ளி 5 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான ஐரோப்பா கோல்ப் தொடர் தொடங்க உள்ளது. பல்வேறு கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில் முதல் முறையாக ஐரோப்பா கோல்ப் தொடருக்கு சவுதி அரேபியாவை சேர்ந்த மகா ஹாடி என்ற பெண் தகுதி பெற்று சாதனை படைத்து உள்ளார்.

டிரையத்லான் தொடர் - மாற்றுத்திறனாளி வீரர் வெற்றி

டிரையத்லான் போட்டியில் அமெரிக்க மாற்றுதிறனாளி வீரர் வென்று உலக சாதனை படைத்துள்ளார். 4 கிலோ மீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் சைக்கிள் பந்தயம் மற்றும்  42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டிகள் கொண்ட டிரையத்லான் தொடர் பனாமா கடற்கரையில் நடந்தது. 17 மணி நேரம் போட்டிகள் நடந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த கிறிஸ் நிகிக் என்ற மாற்றிதிறனாளி இளைஞர் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார். மேலும் இந்த வெற்றியின் மூலம் நிகிக் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார்.

பஹ்ரைனுடனான நல்லுறவு ஒப்பந்தம் - இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்

பஹ்ரைன் நாட்டுடனான நல்லுறவு ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. இஸ்ரேல் மற்றும் பஹ்ரைனுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமுகமாக செயல்பட இரு நாடுகளும் அமெரிக்கா முன்னிலையில் கடந்த மாதம் நல்லுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்நிலையில், அந்த நல்லுறவு ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 62 உறுப்பினர்களும், எதிராக 14 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்