உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரருக்கு அறுவைச் சிகிச்சை? மூளையில் ரத்தக் கட்டு - மருத்துவமனையில் அனுமதி

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான டீகோ மாரடோனா, அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரருக்கு அறுவைச் சிகிச்சை? மூளையில் ரத்தக் கட்டு - மருத்துவமனையில் அனுமதி
x
உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான டீகோ மாரடோனா, அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அர்ஜென்டினா தலைநகர் பியூனோ ஏர்ஸில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாரடோனாவுக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவரது மூளையில் ரத்தம் கட்டியுள்ளது. முழுமையான சோதனைக்குப் பிறகே அறுவைச் சிகிச்சை தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடலோர பாதுகாப்புக்கு ட்ரோன் கேமிரா

கடலோர பாதுகப்பு பணியில் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்து உள்ளதாக இலங்கை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். இலங்கை விமான படைக்கு புதிய தளபதியாக எயார் மார்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடலோர பாதுகப்பு பணிக்கு ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தவும், கொரோனா தடுப்பு பணியில் விமானங்களை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூடு - ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

வியன்னாவில் திங்கள் கிழமை இரவு மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் புகுந்த மர்ம நபர், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் போலீசாரால் கொல்லப்பட்டார். இதுதொடர்பான விசாரணை நடந்துவந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் தங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர் என ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு முன்பாக அந்த நபர் வெளியிட்ட வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், அந்த நபர் தாக்குதல் தொடர்பாக பேசியுள்ளார். இதே நபர் ஐ.எஸ். அமைப்பில் இணைய முயன்ற குற்றத்திற்காக கைதாகி, சமீபத்தில்தான் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்