அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுவதால் வெள்ளை மாளிகையை சுற்றி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்பு
x
அமெரிக்க அதிபர் தேர்தலில்  குடியரசுக் கட்சி சார்பில், அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். அங்கு கொரோனா அச்சத்தால், அதிக தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதால், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தேர்தல் முடிவுகள் தள்ளிப்போனால், வன்முறை ஏற்படும் சூழல் உள்ளதால், வெள்ளை மாளிகையை சுற்றி உயரமான வேலி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வன்முறையாளர்கள் வெள்ளை மாளிகையை தாக்காமல் இருப்பதற்காக வேலி அமைக்கப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தாமதமானல் நீதிமன்றத்தை நாடுவேன் என்று டிரம்ப் கூறி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்