அமெரிக்க தேர்தலில் பரவும் போலி செய்திகள் - நெருக்கடியின் பிடியில் சமூக வலைதள நிறுவனங்கள்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமரப்போவது டிரம்பா.. ஜோ பைடனா என்ற போட்டிக்கு மத்தியில் பரவும் போலி செய்திகளுடன் பிரபல சமூக வலைதள நிறுவனங்கள் எவ்வாறு போராடி வருகின்றன.
அமெரிக்க தேர்தலில் பரவும் போலி செய்திகள் - நெருக்கடியின் பிடியில் சமூக வலைதள நிறுவனங்கள்
x
அரசியல் கட்சிகளின் பிரச்சார யுக்தி என்று வரும்போது பிரதான இடம் பிடிப்பது சமூக வலைதளங்கள்தான். ஆனால், இதில் நேர்மையான பிரசாரம் மட்டும்தான் நிகழ்கிறதா..? என்றால், இல்லை என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம்.
  
அரசியல்வாதிகளின் செல்வாக்கை போலியாக உயர்த்தவும், அவர்களுக்கு வேண்டாதவர்களை எதிர்க்கவும் போலி செய்திகள் பரப்பப்படுகிறது. தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இதுதான் நடக்கிறது. போலி செய்திகள் தொடர்பாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து வருவதாக சொல்கிறார்கள் அங்குள்ள பிராந்திய தேர்தல் அதிகாரிகள்... 
 
இந்நிலையில் போலி செய்திகளை கட்டுப்படுத்த பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. 

டிரம்ப் வெற்றிபெற்ற 2016ஆம் ஆண்டு தேர்தலில் போலி செய்திகள் பரவவும், ரஷ்யா ஆதிக்கம் செலுத்தவும் உதவியாக இருந்த தளம் என்று குற்றம் சாட்டப்படும் பேஸ்புக் தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்