அமெரிக்க தேர்தல் - இறுதிக்கட்ட பிரசாரத்தில் டிரம்ப் தீவிரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள டிரம்ப் கடைசி நாளில் 5 இடங்களில் பேசுகிறார்.
அமெரிக்க தேர்தல் - இறுதிக்கட்ட பிரசாரத்தில் டிரம்ப் தீவிரம்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள டிரம்ப் கடைசி நாளில் 5 இடங்களில் பேசுகிறார். வடக்கு கலிபோர்னியாவில் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு தவறான தேர்வாக அமைவார் என்றும் அவர் ஒரு ஊழல் அரசியல்வாதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார். என்னை தடுக்க 4 வருடங்களில் ஊழல் அரசியல்வாதிகள் அனைத்தையும் செய்துவிட்டனர் எனக் கூறிய டிரம்ப், நான் உங்களுக்கு மட்டும்தான் நான் பதில் சொல்ல வேண்டும். எனவே, ஒன்றிணைந்து ஊழல் அமைப்புகளை தோற்கடிப்போம் என்றார்.

ஓஹியோவில் வாக்குகளை வாங்க ஜோ பைடன் தீவிரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் டிரம்புக்கும், ஜோ பைடனுக்கும் இடையே சரிசமமான போட்டி நிலவுவதாக தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஓஹியோவில் வாக்குகளை உறுதி செய்ய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிரசார கூட்டத்தில் பேசுகையில், 2008, 2012 தேர்தல்களில் ஒபாமா மீது நம்பிக்கை வைத்த நீங்கள், இம்முறை என் மீது நம்பிக்கை வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், அமெரிக்கர்களின் உயிரை குடித்துவரும் கொரோனாவை தோற்கடிக்க முதல்படி டிரம்பை தோற்கடிப்பதுதான் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்