பிலிப்பைன்ஸ் மாகாணங்களை பதம்பார்த்து வரும் "கோனி"

பிலிப்பைன்ஸின் பிரதான தீவான லூசனின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்துது.
பிலிப்பைன்ஸ் மாகாணங்களை பதம்பார்த்து வரும் கோனி
x
பிலிப்பைன்ஸின் பிரதான தீவான லூசனின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்துது. இதனால் அந்த மாகாணங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை நேற்று நெருங்கி வரும் கோனி சூறாவளி தான் இந்தாண்டில், இதுவரை வந்த சூறாவளிப் புயலில் சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. மணிக்கு192.6 மைல் வேகத்தில் வீசிய பெருங்காற்று மற்றும் கனமழையால் மின்கம்பங்கள், வீட்டுக் கூரைகள் பெருமளவு சேதம் அடைந்துள்ளன. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். கோனி சூறாவளி, பிகோல் பிராந்தியத்தில் கேடான்டுவேன்ஸ் மற்றும் அல்பே இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த மாதம் பிலிப்பைன்​சை மோலேவ் சூறாவளி தாக்கியது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்