"கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை" - முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புளோரிடாவில் ஜோபிடனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அதிபர் ஒபாமா, மியாமியில் தொலைக்காட்சி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய அதிபர் டிரம்பை விமர்சனம் செய்தனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை - முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம்
x
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புளோரிடாவில் ஜோபிடனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அதிபர் ஒபாமா, மியாமியில் தொலைக்காட்சி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய அதிபர் டிரம்பை விமர்சனம் செய்தனர். உங்களுடைய 2-வது ஆட்சியில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு கூட பதில் கூற முடியாமல் சென்றவரிடம் இனியும் ஆட்சியை செல்லவிடமாட்டோம் எனக் ஒபாமா கூறியுள்ளார். மேலும், டிரம்பிடம் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை எனவும் விமர்சனம் செய்தனர்.

பல மாகாணங்களில் முன்னிலையில் இருக்கிறேன் - தேர்தல் குறித்து அதிபர் டிரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. ஓகியோவில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த தேர்தலைக் காட்டிலும், இந்த தேர்தலில் தான் பல மாகாணங்களில் முன்னிலையில் இருப்பதாக கூறினார். மேலும் வடக்கு கரோலினா மாகாணத்தில் தங்கள் கட்சி சிறப்பான நிலையில் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

"இந்திய - அமெரிக்க மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கியவர் டிரம்ப்"

இந்திய - அமெரிக்க சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அமெரிக்க அதிபர்  டிரம்ப் அதிக வேலைவாய்ப்பை வழங்கி, வணிகங்கள் செழிக்க உதவியதாக ஐ.நா-விற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்  டிரம்ப் ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், அமெரிக்காவிற்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பை அதிபர் டிரம்ப் உறுதி செய்திருப்பதாகவும், அதனை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்