ஓஹியோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் பிரச்சாரம்
பதிவு : அக்டோபர் 25, 2020, 12:25 PM
ஓஹியோ மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நேற்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளெவ்லேண்ட் பகுதியில் ஜனநாயக கட்சியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தம்மை பெண் சோசலிஸ்ட் என விமர்சித்த டிரம்பை கடுமையாக சாடினார். மக்களால் வாங்கும் திறன் கொண்டு சுகாதாரத் திட்டங்களில் இருந்த அதிபர் டிரம்ப் நழுவ பார்ப்பதாகவும், ஜனநாயக கட்சி அந்த திட்டத்தை விரிவுப்படுத்த பார்ப்பதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.  கிளீவ்லேண்ட் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள யூக்லிட் அவென்யூவில் உள்ள சான்சிபார் என்ற உணவகத்திற்கு சென்ற கமலா ஹாரிசை அவரது கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். 
கொரோனா காலத்தில் வியாபார சிக்கலை எவ்வாறு எதிர்க்கொண்டிர்கள் என அந்த உணவக உரிமையாளரான ஜா​னி ஹட்டனிடம் கேட்டறிந்தார் கமலா ஹாரிஸ். கேட்ஃபிஷ், கீரைகள் மற்றும் ஓக்ரா உள்ளிட்ட உணவுப் பைகளை பிரச்சாரத்துக்கு அனுப்பி வைத்தார் உணவக உரிமையாளர் ஜானி ஹட்டன்.

அமெரிக்க மாகாண தேர்தல் - ஓகியோவில் வாக்குபதிவு

அமெரிக்க தேர்தலில் ஓகியோ, நியூயார்க் மாகாண மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை அளித்தனர். வரும் நவம்பர் 3-ந்தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக மாகாண தேர்தல்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் ஓகியோ மாகாணம் கிளிவ் லேண்டில் நடந்த தேர்தலில் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல் நியூயார்க்கில் நடந்த வாக்குபதிவிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கடல் அலை போல் திரண்டு வந்து தங்கள் வாக்குகளை அளித்தனர். இதுவரை 50 மில்லியன் அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகளை அளித்துள்ள நிலையில், இது ஒரு நூற்றாண்டின் அதிகபட்ச வாக்கு பதிவு என்ற சாதனையாகவும் கருதப்படுகிறது. 

காபூலில் பயங்கர வெடிவிபத்து - 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த வெடி குண்டு தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக இறந்தனர். காபூல் முக்கிய சாலையில் நடந்த  குண்டுவெடிப்புக்கு இதுவரை 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகளே குண்டு வெடிப்புக்கு காரணம் என அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இதுவரை தலிபான் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மக்கள் மீது துப்பாக்கி சூடு

நைஜீரியாவில் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நைஜீரிய அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லாகூசில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சுங்க சாவடி கண்ணாடி உடைக்கப்பட்டன. இதையடுத்து நடந்த துப்பாக்கி சுட்டில் பலர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் திவீர சிகிச்சையில் உள்ளனர்.

பிற செய்திகள்

ஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்டிரா செனிகாவின் கூட்டு முயற்சி : "70% சிறப்பான பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து"

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்டிரா செனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, 70 சதவீதம் சிறப்பான பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 views

பனியில் விளையாடும் பாண்டா கரடிகள் - உருண்டு, புரண்டு உற்சாகம்

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குயிங்காய் மாகாணத்தில் பனிப்பொழிவு தொடங்கி உள்ள நிலையில், சைனிங் நகரில் உள்ள பூங்காவில் பாண்டாக் கரடிகள் விளையாடி மகிழ்ந்தன.

62 views

எத்தியோப்பியாவில் நீடிக்கும் உள்நாட்டுப்போர் - சூடானில் அகதிகளாகும் மக்கள்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில், நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள், தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

67 views

வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கும் ரோபோட்டுகளின் செயலால் மகிழ்ச்சி அடையும் வாடிக்கையாளர்கள்

ஜப்பான் வணிக வளாகங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பிரத்யேக ரோபோட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

29 views

"பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதி" - ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

46 views

போராட்டத்தில் வன்முறை வெடிப்பு- நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.