சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் தரையிறங்கினர்

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் தரையிறங்கினர்
x
தரை மட்டத்தில் இருந்து 250 மைல் உயரத்தில், விண்வெளியில், பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் மூன்று பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். கசகஸ்த்தான் நாட்டின் டெஸெஸ்கன் நகருக்கு அருகே உள்ள சமவெளிப்  பகுதியில், பாராசூட் மூலம் தரையிரங்கிய சோயுஸ் விண்வெளி வாகனத்தில் இருந்து ரஷ்யாவை சேர்ந்த அன்டொலி இவான்ஷின், இவான் வாக்னெர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ் காசிடி ஆகிய விண்வெளி வீரர்கள் பத்திரமாக திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் காசிடி, 378 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்