போப்பின் பாதுகாவலர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று - வெள்ளை நிற முக கவசம் அணிந்து வழிபாட்டில் பங்கேற்ற போப்

உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் முதலாம் பிரான்சிஸ் நேற்று முதன் முறையாக முக கவசம் அணிந்து பொது வழிப்பாட்டில் பங்கேற்றார்.
போப்பின் பாதுகாவலர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று - வெள்ளை நிற முக கவசம் அணிந்து வழிபாட்டில் பங்கேற்ற போப்
x
உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் முதலாம் பிரான்சிஸ் நேற்று முதன் முறையாக முக கவசம் அணிந்து பொது வழிப்பாட்டில் பங்கேற்றார். சாண்டா மரியா தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையின் போது, 
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவர் பார்தலோமெவ் உள்ளிட்டவர்களுடன் முக கவசம் அணிந்து பங்கேற்றார். போப்பின் பாதுகாவலர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், போப் முக கவசம் அணியாதது தொடர்பாக சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து பொது மக்களை சந்திக்கும் வாகனத்தில் வரும் போது மட்டும் முக கவசம் அணிந்து வந்த போப் முதலாம் பிரான்சிஸ், தற்போது பொது வழிபாட்டிலும் முக கவசம் அணியத் 
தொட​ங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்