370-ஐ மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரும் வரையில்...என்னை தூக்கில் போட்டாலும் போராட்டம் தொடரும் - பரூக் அப்துல்லா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்குக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், இந்திய அரசியல் சாசன சட்டம் 370-ஐ மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரும் வரையில் தங்களது நீண்டக்கால அரசியல் போராட்டத்துக்கு தயார் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
370-ஐ மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரும் வரையில்...என்னை தூக்கில் போட்டாலும் போராட்டம் தொடரும் - பரூக் அப்துல்லா
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்குக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், இந்திய அரசியல் சாசன சட்டம் 370-ஐ மீண்டும்  நடைமுறைக்கு கொண்டு வரும் வரையில் தங்களது நீண்டக்கால அரசியல் போராட்டத்துக்கு தயார் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் என்னை தூக்கில் போட்டாலும் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, அதிகாரிகள் அவர்களின் கடமையை செய்தார்கள், நாங்கள் எங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சோதனையால் தாம் கவலைப்படவிடல்லை என்றும், எங்களது இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 


அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்பம் விளைவிக்க முயன்றதாக புகார் - உக்ரேன் நாடாளுமன்ற உறுப்பினர் பேஸ்புக் கணக்கு முடக்கம்

உக்ரேன் நாடாளுமன்ற உறுப்பினரான ஆண்ட்ரி டெர்காச் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.

உக்ரேன் நாடாளுமன்ற உறுப்பினரான டெர்காச், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின், வழக்கறிஞர் ரூடி கியுலியானி உடன் இணைந்து ஜனநாயக கட்சி அதிபர்  வேட்பாளர் ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் பற்றிய அவதூறான தகவல்களை சேகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஆண்ட்ரி டெர்காச்சின் பேஸ்புக் கணக்கை, அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கி உள்ளது. ஆண்ட்ரி டெர்காச், ரஷ்ய ஏஜெண்ட்ஆக செயல்படுவதுடன், அதிபர் தேர்தலில் தலையிட முயற்சிப்பதாகவும் அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தேர்தலில் ஒரு தரப்புக்கு செல்வாக்கு  உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், பேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது இல்லை என்ற அடிப்படையில்,  அவரது  கணக்கையும்,  பக்கத்தையும் அகற்றி உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  மாஸ்கோவில் உள்ள ரஷ்ய எஃப்.எஸ்.பி. உளவுத்துறை அகாடமியில் படித்தவர் டெர்காச் என்பது குறிப்பிடத்தக்கது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக குரல் - பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்

உலகிலே அதிக பிளாஸ்டிக் கழிவுகளை கொண்ட இந்தோனேசியாவின் பாலி தீவுப்பகுதி கடல் தான் உள்வாங்கும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒதுக்கிவிட்டுச் செல்லும் பகுதியாகும்.   இங்கு பிளாஸ்டிக்கை ஒழிக்க கடந்த 10 வருடங்களாக மெலட்டி விஜ்சென் - இசபெல் விஜ்சென் சகோதரிகள் போராடி வருகின்றனர். பை-பை பிளஸ்டிக் பேக்ஸ் என்ற அமைப்பை தொடங்கி பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளும் சகோதரிகள், களத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


பிரேசிலில் 3-ம் கட்ட சோதனையில் சீன தடுப்பூசி - இதுவரை 9,000 பேரிடம் செலுத்தி சோதனை

சீனாவின் சினோவாக் பயோடெக் நிறுவனம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி, சோதனை முறையில் பிரேசில் நா​ட்டில் 13 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 9 ஆயிரம் பேருக்கு செலுத்தி சோதனை செய்ததில், முடிவுகள் அந்த தடுப்பூசி பாதுகாப்பானதாக  உள்ளதாக கூறப்படுகிறது. மூன்றாம் கட்ட சோதனை முடிய இன்னும் நான்காயிரம் பேருக்கு சோதனை நடத்த வேண்டிய நிலை உள்ளதால் அதன் பின்னர் தான் உறுதியாக எதனையும் கூற முடியும் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க காலம் உள்ளது - "ஆட்சியாளர்கள் நினைத்தால் முடியும் என்கிறார் பொது சுகாதார நிபுணர்"

அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்னும் காலம் இருக்கிறது என்றும், ஆட்சியாளர்கள் நினைத்தால் அதனை செய்ய முடியும் என அமெரிக்க பொது சுகாதார நிபுணர் பீட்டர் ஹோடெஸ் தெரிவித்துள்ளார். தேவையற்ற உயிரிழப்புகளை தடுக்க நாம் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பல இடங்களில் ஊரடங்​கை அமல்படுத்த வேண்டும் என்றும், மது கூடங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களை தற்காலிகமாக மூடுவதுடன், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முக கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் பீட்டர் ஹோடெஸ் வலியுறுத்தி உள்ளார்.  அமெரிக்காவில் நிலவும் குளிர், கொரோனா பரவ காரணம் என கூறப்படும் நிலையில், அரசின் மாறுபட்ட தகவல்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள், விஞ்ஞானிகளின் கருத்துக்களும் இந்த தொற்று பரவ காரணமாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

அலஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 புள்ளி 5ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரலைகள் ஏற்படும் எனவும் கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்லக் வேண்டாம் என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மாகாணங்களில் ஒன்றான அலஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீ வீடுகள் சேதம் - தீயை அணைக்க போராட்டம்
 
அமெரிக்காவின் கொலோராடாவில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. அங்கு இதுவரையில் 7 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீக்கிறையாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க அந்நாட்டு படைகள் போராடி வருகின்றன. காட்டுத் தீக்கு 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அப்பகுதியில் இருந்து மக்களை மீட்பு குழுவினர் வெளியேற்றி வருகின்றனர். கொலோராடாவில் வனப்பகுதியை காட்டுத்தீ அழிப்பதினால் வானுயர எழும் புகைமூட்டத்தை அப்பகுதியாக சென்றவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
Next Story

மேலும் செய்திகள்