இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிக்சூடு

கிழக்கு லடாக் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், இந்திய சீன எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிக்சூடு
x
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம், இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து, அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த 3 மாதங்களில் 5 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது,. இந்த நிலையில்,  கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது,.  இதனையடுத்து இந்திய ராணுவம் எல்லை மீறிவிட்டதாகவும்,  தங்களுக்கு எதிர் தாக்குதல் நடத்த வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்