அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகாவிச் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை எதிர்த்து விளையாடிய செர்பியாவின் ஜோகோவிச்,  5க்கு-6 என்ற புள்ளிக் கணக்கில் தனது  முதல் செட்டை இழந்தார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை ஆவேசமாக டென்னிஸ் கோர்ட்டுக்கு வெளியே அடித்தார். அவர் அடித்த பந்து போட்டி நடத்தும் பெண் அதிகாரி ஒருவரின் கழுத்தில் தாக்கியது.  
இந்நிலையில் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கரீனோ பாஸ்டா வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஜோகோவிச் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்