ப‌ப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை - கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சீனா

ப‌ப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ப‌ப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை - கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சீனா
x
ப‌ப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய சீன வர்த்தகத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காவோ பெங்க் ,  இந்தியாவின் நடவடிக்கை சீன முதலீட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குபவர்களின் சட்ட உரிமையை மீறுகிறது என்றார். இது இந்திய நுகர்வோரின் நலன்களையம் பாதிப்பதுடன், திறந்த பொருளாதாரத்தில் இந்தியாவில் முதலீடு செய்வதையும் பாதிக்கிறது என்று கூறிய காவோ பெங்க், இந்தியா தனது தவறை திருத்தி கொள்ள வேண்டும் என்றார். தேசிய பாதுகாப்பு எனக்கூறி, பாகுபாடு காட்டி சீன நிறுவனங்கள் தடை செய்வதாக கூறிய அவர்,  இந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக மையத்தின் விதிகளை மீறியதாகும் என குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்