இலங்கையில் தொண்டமானின் வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பலானது

இலங்கையில் தொண்டமான் குடும்பத்தின் பூர்வீக வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சாம்பலானது.
இலங்கையில் தொண்டமானின் வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பலானது
x
இலங்கையில் தொண்டமான் குடும்பத்தின் பூர்வீக  வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சாம்பலானது. நுவரெலியா கொத்மலையில் உள்ள
இந்த பங்களாவில், இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த  தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த வீட்டில் மறைந்த ஆறுமுக தொண்டைமான் உள்ளிட்டோர் வசித்து வந்தனர். தற்போது இந்த பங்களா, அமைச்சர் ஜீவன் குமாரவேல் தொண்டமானின் பராமரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்