நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் - ஜனநாயக கட்சிக்கு குவிந்த தேர்தல் நன்கொடை

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன், துணை அதிபர் பதவிக்கு, போட்டியிட, இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான கமலா ஹாரிஸ் தேர்வு செய்துள்ளார்.
நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் - ஜனநாயக கட்சிக்கு குவிந்த தேர்தல் நன்கொடை
x
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும்  அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன்,  துணை அதிபர் பதவிக்கு, போட்டியிட, இந்திய வம்சாவளியை சேர்ந்த  எம்.பி.யான கமலா ஹாரிஸ் தேர்வு செய்துள்ளார். இவரின் தேர்வு, இந்திய மற்றும் கருப்பின மக்களின் ஆதரவை திரட்ட உதவும் என்று கருதப்படுகிறது. கமலா ஹாரிஸின் பெயரை அறிவித்த 24 மணி நேரத்தில், ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சர நிதிக்கு 2.6 கோடி டாலர்கள் நன்கொடையாக குவிந்துள்ளது.  ஜூலை மாத இறுதியில் தேர்தல் நிதியாக, டிரம்ப் சுமார் 30 கோடி டாலர்களை நன்கொடையாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்கா செல்லும் விசாக்களில் தளர்வு - அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு 


வெளிநாட்டினர் அமெரிக்காவில் சென்று  வேலை பார்க்க வழங்கப்படும் எச்1 பி மற்றும் எச்4  விசாக்களுக்கான தடையில் சில தளர்வுகளை அதிபர்  டிரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் அதே வேலைக்கு திரும்பினால், அவர்களுக்கு எச் 1 பி விசா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்லும்  பணியாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எச் 4 விசா வழங்குவதிலும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த 2 விசாக்களையும் 
வழங்க இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்து கடந்த ஜூன் 22ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் கடும் பொருளாதார வீழ்ச்சிஐரோப்பிய நாடுகளிலேயே இங்கிலா்து நாட்டில் தான் கொரோனா பாதிப்பு மோசமாக இருந்ததாக கூறப்படும் நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 50 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது,. இதனால் ஊரடங்கு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. இந்த நிலையில் உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடான இங்கிலாந்து மற்ற பெரிய நாடுகள் இதுவரை சந்தித்திராத அளவுக்கு  பொருளாதார  வீழ்ச்சியை சந்தித்துள்ளது, 2020-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 புள்ளி 4 சதவீதம் சரிவடைந்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றை சரியாக கையாளாததே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்ப 2021-ம் ஆண்டின் இறுதி காலாண்டு வரை ஆகும் என இங்கிலாந்து தேசிய வங்கி கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்