அரசின் நிலைப்பாட்டை கேள்வி கேட்ட பெண் எம்.பி. - கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கம்
பதிவு : ஜூலை 08, 2020, 04:01 PM
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேபாளத்தில் ஜனதாசமா​ஜ்பாடி கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. சரிதா கிரியை கட்சி மற்றும் எம்.பி. பதவியில் இருந்து விடுவித்து அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
நேபாள புதிய வரைபட விரிவாக்க விவகாரம்: அரசின் நிலைப்பாட்டை கேள்வி கேட்ட பெண் எம்.பி. - கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கம்


கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேபாளத்தில் ஜனதாசமா​ஜ்பாடி கட்சியை சேர்ந்த  பெண் எம்.பி. சரிதா கிரியை கட்சி மற்றும் எம்.பி. பதவியில் இருந்து விடுவித்து அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கலாபனி உள்ளிட்ட 3 இடங்களை, தனது வரைபடத்தில் சேர்க்கும் மசோதாவை அண்மையில் அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரிதா கிரி தீர்மானம் கொண்டு வந்தார். அதனை திரும்பப் பெற அறிவுறுத்திய நிலையில், கட்சியின் கட்டளையை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில், அவரது எம்.பி. பதவியை பறிக்கவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கவும் கட்சி நியமித்த 3 பேர் கொண்ட குழு பரிந்துரைத்தது பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் விசா ரத்தாகும் நிலை - இந்தியாவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அமெரிக்கா தகவல்


இந்திய மாணவர்களின் விசா ரத்து தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா முறையிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்கள், சில படிப்புகளை முழுவதுமாக ஆன்லைன் படிப்புகளாக மாற்றியுள்ளது. இந்நிலையில், இந்த பாடப் பிரிவுகளில் படித்து வரும் மற்ற நாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மாணவர்கள் திடீரென வெளியேற்றப்படும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் டேவிட் ஹேல் உடன் பேச்சு நடத்திய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஸ் வர்த்தன் ஸ்ரீங்காலா இது தொடர்பாக, இந்தியாவின் கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது டேவிட் ஹேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

"சீன அதிகாரிகளுக்கு விசா வழங்க போவதில்லை" - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்


சீனாவின் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு விசா வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ,  சீன அரசு திபெத்தின் பகுதிகளில் வெளிநாட்டவர் செல்வதற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருவது, மனித உரிமை மீறல் என்று கூறியுள்ளார்,.  மேலும்  ஆசியாவின் முக்கிய நதிகளின் சுற்றுச்சூழலை காக்க  சீனா தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ள பாம்பியோ,  இது போன்ற காரணங்களால், சீனாவின் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு விசா வழங்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா


கொரோனா விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியையும் நிறுத்துவதாக அறிவித்தார். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இதற்கான கடிதத்தை அமெரிக்கா, ஐ.நா. பொதுச்செயலாளரிடம்  வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,. உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டதாக அமெரிக்கா அறிவித்தாலும் ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்பது கூறப்படுகிறது,.

பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், முக கவசம் அணியாமல் வலம் வந்த பிரேசில் அதிபர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு நடவடிக்கைக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தவர், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனா. ஊரடங்கு அறிவித்த அந்நாட்டு மாகாண ஆளுநர்களையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். இதுபோல, கொரோனா அச்சம் இன்றி முக கவசம் அணியாமல் அவர் வலம் வந்ததால், சமீபத்தில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவரை கண்டித்த‌து. இந்த நிலையில், அவருக்கு திடீரென 100 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னரும் தான் நலமுடன் இருப்பதாக அவர் கூறி வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரேசில் அதிபர் நலம் பெற உலக சுகாதார அமைப்பு விருப்பம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சனோரா விரைவில் நலம் பெற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ், இது தொடர்பாக கூறுகையில், எந்தவொரு நாடும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை எனவும் எந்தவொரு நாடோ, தனி நபரோ பாதுகாப்பாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், பிரேசில் அதிபர் பூரண குணமடைய வாழ்த்துவதாக டெட்ராஸ் குறிப்பிட்டார். 

இங்கிலாந்து - மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடக்க உள்ளது. களத்தில் தொடுதலை தவிர்ப்பது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சானிடைசரால் கழுவுவது, உடலோடு உரசி கொண்டாடுவதை தவிர்ப்பது என்று வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் மூலம் 117 நாட்களுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

379 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

214 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

57 views

பிற செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற எசல பெரகரா திருவிழா

இலங்கையில் எசல பெரகரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான யானை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

14 views

2750 டன் வெடி பொருட்கள் வெடித்து விபத்து - 73 பேர் உயிரிழப்பு - 3,700 பேர் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

5813 views

இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் - வாக்களிக்க வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே இலங்கையில் 9ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

69 views

நாளை இலங்கை நாடாளுமன்ற தே​ர்தல் - இலங்கையில் திருப்ப​த்தை ஏற்படுத்துமா ஆகஸ்ட் 5?

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் மக்கள் முட​ங்கி உள்ள நிலையில் இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

385 views

விசா நடைமுறைகளை கடுமையாக்கிய அமெரிக்கா

எச் -1 பி விசா நடைமுறைகளை மேலும் கடுமையாக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

149 views

டிக் டாக் செயலியை வாங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்? - "பெருமளவு தொகையை அரசுக்கு பங்காக, வழங்க வேண்டும்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

டிக் டாக் செயலியை, வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அமெரிக்க அரசு கருவூலத்திற்கு, பெரும் பங்கை தர வேண்டியது அவசியம் என, அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.